இந்த மாதிரி ஒரு பொழைப்பு பிழைச்சு அதுல வர காசுல சாப்புடனுமா? பயில்வானுக்கு நெத்தியடி கேள்வி கேட்ட கலா மாஸ்டர்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், காமெடியனாகவும், துணை வேடங்களிலும் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருப்பதால் பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின்னர் சில காலம் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவங்களை கொண்டு யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றி விமர்சித்து வருகிறார். நடிகர் நடிகைகளை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த மாதிரி ஒரு பொழைப்பு பிழைச்சு அதுல வர காசுல சாப்புடனுமா? பயில்வானுக்கு நெத்தியடி கேள்வி கேட்ட கலா மாஸ்டர் 1

சமீபத்தில் பிண்ணனி பாடகி சுசித்ரா பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையானது. இதனால் சுசித்ரா பயில்வானுக்கு போன் செய்து திட்டி தீர்த்துவிட்டார். பின்னர் மீனாவின் கணவர் இறந்த போது மருத்துவ சான்றிதழ் கேட்டு மீண்டும் பிரச்சினையை கிளப்பினார். தற்போது இரவின் நிழல் படத்தில் ஆடையில்லாமல் நடித்த ரேகா நாயர் பற்றி தவறாக பேசினார் பயில்வான். பயில்வானை வாக்கிங் செல்லும் போது நேரில் ரேகா நாயர் இனிமே என்னைப் பத்தி பேசுன செருப்பாலேயே அடிப்பேன் என்று திட்டி தீர்த்தார். சமீபத்தில் கூட விருமன்பட வெளியீட்டு விழாவில் சூரி, ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று கூறியதை, சூரி கோயிலுக்கும் இந்து மதத்திற்கும் எதிராக இருக்கிறார் என்று கூறி சூரிய திட்டி தீர்த்து இருந்தார் பயில்வான். இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் பயில்வான்.

இந்த நிலையில் நடன இயக்குனர் கலா மாஸ்டர், ஒரு பேட்டியில் பயில்வான் பற்றி பேசியுள்ளார். அதில் நீங்கள் ஒரு நடிகர் சூட்டிங்கிற்கு சரியாக வரமாட்டார், நேரத்திற்கு வர மாட்டார் இது போன்ற காரணங்களுக்கு ஒருவரை திட்டலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசுவது தேவையற்றது. இவ்வாறு இவரை காயப்படுத்தி பேசுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? அப்படி ஒரு காயப்படுத்தி கிடைக்கும் பணம் தேவைதானா? நான் யாரையும் அப்படி பேச மாட்டேன். அப்படி பேசுபவர்களின் வீடியோக்களை கூட பார்ப்பதில்லை, அந்த youtube சேனல்களை புறக்கணித்து விடுவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதுபோன்றே கிடைக்கும் பணத்தில் தான் வாழ வேண்டுமா?/ என்றும் பயில்வானை பார்த்து சரமாரியாக கேட்டுள்ளார் அவரின் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண… watch the below video..

Youtube Video Code Embed Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்