அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள்.! வீடியோ வெளியிட்டு பெருமைப்படுத்திய படக்குழு

வெளியிட்டது

இன்று அமரர் கல்கியின் 123 வது பிறந்தநாள் ஆகும். தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பவர் கல்கி. இவரது இயற் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 35க்கும் மேற்பட்ட சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என பல நூல்களை எழுதி இருக்கிறார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் பங்காற்றி இருக்கிறார். இவர் எழுதிய தியாக பூமி என்ற நாவல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய மற்றொரு உலகப் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் தற்போது படமாக எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள மயிலாடுதுறை அருகில் பட்டமங்கலம் என்னும் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். பின்னர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள்.! வீடியோ வெளியிட்டு பெருமைப்படுத்திய படக்குழு 1

பின்னர் பல நாவல்கள், புதினங்கள், சிறுகதைகள் என்று அவர் எழுத்துலகில் புகழ்பெற்றவராக விளங்கினார். அவர் எழுதிய வரலாற்று புதினங்கள் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகும். மேலும் கள்வனின் காதலி, தியாக பூமி, மோகினி தீவு என்று பல புகழ் பெற்ற புதினங்களை எழுதி இருக்கிறார். இதில் பொன்னியின் செல்வன் என்ற நாவல் சோழர்களின் வரலாற்றை குறிப்பிடும் நாவலாகும். திருச்சிராப்பள்ளி, தஞ்சை பகுதிகளில் ஆட்சி புரிந்த சோழ மன்னர்களின் அரியணைக்கு வந்த ஆபத்தையும், அதிலிருந்து அவர்கள் எவ்வாறு இந்த நாட்டை காத்தனர் என்பது பற்றியும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் கதை தான் பொன்னியின் செல்வன். தற்போது இது மணிரத்னம் அவர்களால் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று கல்கியின் 123 வது பிறந்த நாளான இன்று அவர் நினைவை போற்றும் வகையில் படக்குழு ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்