Categories: சினிமா

KALKI AD2898 படத்தின் OTT தேதி வெளியாகியது..! ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டுமா..! என்னைக்கு ரீலிஸ் தெரியுமா?

வெளியிட்டது

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிய படம் கல்கி. இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்து உள்ளார். 600 கோடி ரூபாய் பட்ஜட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் தமிழ் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

KALKI AD2898 படத்தின் OTT தேதி வெளியாகியது..! ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டுமா..! என்னைக்கு ரீலிஸ் தெரியுமா? 1

மிகப்பெரிய பட்ஜெட் படங்களை வழக்கமாக நெட்பிளிக்ஸ் வாங்கும் நிலையில் , பீரியாடிக் படங்களை அமேசான் குறி வைத்து வாங்கி வருகிறது. அதன்படி தற்போது இப்படத்தையும் அமேசான் நிறுவனமே வாங்கி இருக்கிறது. சுமார் 200 கோடி ரூபாய்க்கு இப்படத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி இப்படம் அமேசான் பிரேமில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக ஹிந்தி வெர்ஷன் மட்டும் நெட்பிளிக்ட்ஸில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலாக இருப்பதால், ஓடிடியிலும் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெளியிட்டது

புதிய செய்திகள்