“ஆண்டவரே நீங்க இங்கயும் வந்துடீங்களா”!! “பொன்னியின் செல்வன் படத்தில் கமல்”!!

வெளியிட்டது

தமிழ் திரை ரசிகர்களின் மிக பெரிய கனவு படமாக இப்பொது இருப்பது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயகாந்தன் இளங்கோ குமரவேல் எழுத்தில், அமரர் கலக்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் “மெட்ராஸ் டாக்கிஸ்” மற்றும் “லைகா ப்ரோடுக்ஷன்ஸ்” சுபாஷ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

"ஆண்டவரே நீங்க இங்கயும் வந்துடீங்களா"!! "பொன்னியின் செல்வன் படத்தில் கமல்"!! 1

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆதித்ய கரிகாலனாக “சீயான்” விக்ரம், அருள்மொழி வர்மனாக “ஜெயம்” ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டவனாக சரத்குமார், சின்ன பழுவேட்டவராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் என பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக செட் டிசைன், பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகள், குந்தவை – நந்தினியின் சந்திப்பு என டீசேரிலேயே சின்ன படம் ஒன்றை காட்டியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்த படம் ஏற்கனவே மணிரத்னம் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரையும் முன்னணியில் வைத்து எடுக்க திட்டமிட்டு பின்னர் கைவிட்டு போனது. இப்பொது வேறொரு நடிகர் பட்டாளத்தில் அதே போல பிரமாண்ட சிந்தனையுடன் படம் தயாராகியுள்ளது.

இந்த கதை 1950களிலேயே அமரர் கல்கி எழுதி வெளியாகியது. அப்போதே இதனை படமாக எடுக்க மிக பெரிய அளவில் முயற்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் எப்படியேனும் எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் முயற்சித்துள்ளார். இருப்பினும் அவருக்கு கைகூடாமல் பின்னர் நடிகர் கமல் முழு மூச்சில் இறங்கி அவரும் கைவிட்டார். இப்பொது படம்  உருவாகியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஆகப்பெரும் சினிமா கலைஞர் கமல். இவர் இப்பொது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு அங்கமாக மாறியுளளார். தமிழ் உச்சரிப்பில் சிறந்த கமலை வைத்து இந்த கதையின் விரிவாக்கத்தை பேசவைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதற்கான டப்பிங்கை கமல் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்