கமல் தான் என்னுடைய பேவரைட் ஹீரோ வித்யா பாலன்!!

வெளியிட்டது
கமல் தான் என்னுடைய பேவரைட் ஹீரோ வித்யா பாலன்!! 1

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார் வித்யா பாலன். அவர் தமிழ் திரையுலகில் சமீபத்தில், நடிகர் அஜித் நடிக்க, இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான, போனிக் கபூர் தயாரித்து வெளியிட்ட நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் மீதும் ஆர்வமாக ட்விட்டர் மூலம் சில செய்திகளை வெளியிடுகிறார்.

நடிகர் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து, அவர் தன்னுடைய கருத்தை வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டு கூறியிருக்கிறார்.அதில் வித்யா பாலன் கூறியதில் :
நடிகர் கமல் நடிப்பிலும், இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்திலும் உருவான மைக்கேல் மதன காமராஜன் படத்தை, என்னுடைய கணவர் சித்தார்த்துடன் இணைந்து மீண்டும் பார்த்தேன். மிக அற்புதமான நடிப்பை நடிகர் கமல் வெளிப்படுத்தி இருப்பார்.

நான்கு வேடங்களில், நடிகர் கமலின் நடிப்பு அற்புதம். குறிப்பாக, நான்கு கமலில் ஒரு கமல் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட். ஊர்வசி த்ருப்பு த்ருப்பு என்று சொல்வாரே, அந்த கமல் ஆஹா அதுதான் அற்புதம்.இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்