Categories: சினிமா

இவரு சரின்னு சொல்றாரா? தப்புனு சொல்றாரா? இந்தி திணிப்பு குறித்து எப்போதும் போல புரியாத பாணியில் பேசிய கமல்.

வெளியிட்டது

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பெரிய அளவில் நடந்தது. நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, இசைமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் உதயநிதி ஸ்டாலின்,சிம்பு என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Video link below.

4 ஆண்டுகள் கழித்து இந்த விழாவின் மூலம் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக கூறிய கமல், பல்வேறு விஷயங்களுக்கு தன்னுடைய பாணியில் பதிலளித்தார். முக்கியமாக எனக்கு இந்த No.1 மற்றும் No.2 இடங்களை பற்றி கவலை இல்லை. நான் நடிகன் அவ்ளோதான்” என்றார்.

இவரு சரின்னு சொல்றாரா? தப்புனு சொல்றாரா? இந்தி திணிப்பு குறித்து எப்போதும் போல புரியாத பாணியில் பேசிய கமல். 1

மேலும் பேசுகையில் “நான் தமிழ் வாழ்க’னு சொல்றது என்னோட கடமையே தவிர நான் எந்த மொழியும் அழியணும்’னு நினைக்குற ஆள் இல்லை, இந்தியாவோட அழகே இந்த பன்முகத்தன்மை தான், அதுக்கு சிறந்த உதாரணம் இந்த போஸ்டர் தான்” என சொல்லி விக்ரம் பட போஸ்டரில் தன்னுடன் உள்ள நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசினார்.

மேலும் “உங்களுக்கு எந்த மொழி படிக்கணும்’னு ஆசை இருக்கு படிங்க, ஹிந்தி,பிரெஞ்சு,ஜெர்மன் ஏத்துவாவெனலும் இருக்கலாம், ஆனா அழகான இந்தியாவோட பன்முகத்தன்மையை அழிச்சிடாதீங்க” எனவும் கூறினார்.

இது அவர் இப்பொது நடந்து வரும் இந்தி திணிப்பை அவர் ஆதரிக்கிறாரா? இல்லை எதிர்கிறாரா? என ரசிகர்கள் குழம்பி உள்ளனர். எப்போதும் கமல் கோரும் பல விஷயங்கள் சாதாரண போது மக்களுக்கு புரிவது கடினம் தான்.

அந்த விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, விக்ரம் படத்தின் பாடல்களும் படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியானது. ட்ரையிலர் வெளியான சில மணி  நேரங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது. படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபகாலமாக வெளியான கமல் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy – Little talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்