விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து இருந்தது. சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் போன்ற முண்ணனி நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்து இருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இந்த படம் வெளியானது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கமலை கொண்டாடி தீர்க்கின்றனர் மலையாள மொழி பேசும் மக்கள். இதனால் கமலஹாசன் ஏகத்துக்கும் குஷியாக இருக்கிறார். இயக்குனருக்கு 80 லட்சம் மதிப்பில் காரும், 13 உதவி இயக்குனர்களுக்கு உயர் ரக பைக்கும் பரிசளித்தார். மேலும் சிறப்பு தோற்றத்தில் வந்து படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி சென்ற சூர்யாவுக்கு விலையுயர்ந்த தனது ரோலக்ஸ் வாட்சையும் பரிசாக அளித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

25 நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், கமலின் அயராத உழைப்பும் தான் காரணம். நடிப்பிற்காக தன்னை தானே வருத்திக் கொள்வதில் கமலின் கலைத் திறமை வெளிப்படும்.தற்போது அவரின் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் படத்தின் க்ளைமாக்ஸ்-ல் பெரிய பீரங்கி ரக மெஷினை இழுத்து வந்து எதிரிகளை சுட்டு வீழ்த்துவார் கமல். அந்த காட்சிகள் எடுக்கப்படும் போது மணி இரவு 2, ஆனாலும் தளராமல் 67 வயதில் கூட 26 push up களை அசராமல் எடுத்துள்ளார் கமல். அவரின் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை கமலின் ரசிகர்கள் பகிர்ந்து 67 வயதிலும் இறங்கி மாஸ் காட்டியதற்கு ஒரு ராயல் சல்யூட் என்றும், சினிமாவிற்காக எதை வேண்டுமானலும் செய்ய தயாராக இருப்பதால்தான் அவர் உலக நாயகன் என்றும் அவரைப் பாராட்டி வருகின்றனர். கமல் தமிழ் திரை உலகிற்கே ஒரு பெருமை என்பதை மீண்டும் நீரூபித்துக் காட்டியிருக்கிறார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7