Categories: BiggBoss Ultimate

பிக்பாஸ்ஸில் இருந்து விலகுகிறேன்..அதிகாரபூர்வமாக வெளியிட்ட கமல் | BiggBoss Ultimate

வெளியிட்டது

தற்போது வெளியாகியுள்ள செய்தியில் இனிமேல் பிக்பாஸ்ஸில் நான் இல்லை என்பதை கமல் உறுதி செய்துள்ளார். ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள கமல் இது தற்காலிக இடைவெளிதான் மீண்டும் உங்களை சீசன் 6ல் சந்திக்கிறேன் என்று கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

பிக்பாஸ்ஸில் இருந்து விலகுகிறேன்..அதிகாரபூர்வமாக வெளியிட்ட கமல் | BiggBoss Ultimate 1

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் சற்று வித்தியாசமானது. என்னவென்றால் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பு ஆகும் என்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால் பழைய சீசன்களைப் போல இல்லாமல் இதை டிவியில் ஒளிபரப்பு செய்யாததால் பலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். ஆனாலும் அனைத்து ஞாயிறு கிழமைகளில் அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை மூன்று மணி நேர தொடர் ஒளிபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். இதில் ஓவியா மற்றும் பரணி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் அல்டிமேட் கமல் ப்ரோமோ வெளியான போதே சுவரை கொஞ்சம் உயர்த்தி கட்டுங்கள் என்று பரணியை மறைமுகமாக கூறியது போன்று இருந்தது.
எனவே பரணி கண்டிப்பாக கலந்து கொள்வார் என்ற கருத்தும் பிக்பாஸ் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதே போல் ஓவியா தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால் உடனே பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப் படுவார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே  கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அனைத்து ஞாயிற்றுக்கிழமை மாலை கமலஹாசன் ஹவுஸ்மேட்ஸிடம் உரையாற்றுகிறார். சில சமயங்களில் கோபமாகவும், சில சமயங்களில் சுவாரஸ்யமாகவும் நிகழ்ச்சியை நகர்த்தி வருகிறார் கமல் என்றால் அது மிகையில்லை

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்