Categories: சினிமா

ஜவான் ஆடியோ லாஞ்சில் நடந்த சுவாரசியம்! வீடியோ காலில் வந்து ஷாருக்கானுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்.!

வெளியிட்டது

அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நிலையில், அந்த விழாவில் வீடியோ காலில் வந்து படக்குழு குழுவினரை கமலஹாசன் வாழ்த்தி இருக்கிறார். அந்த முழு வீடியோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி, பிகில், தெறி, மெர்சல் என நான்கு நல்ல படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது முதன்முறையாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் வெளியிட்டு தயாராகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் 7-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜவான் ஆடியோ லாஞ்சில் நடந்த சுவாரசியம்! வீடியோ காலில் வந்து ஷாருக்கானுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்.! 1

இதில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் நயன்தாராவும் தனது முதல் ஹிந்தி திரைப்படமாக இந்த்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன் அட்லீ மற்றும் ஷாருக்கான் இருவரையும் வாழ்த்திப் பேசி இருக்கிறார்.

கமலின் இந்த பேச்சை கேட்ட ஷாருக்கான் கைதட்டி உற்சாகமடைந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்