கடந்த வாரம் வெளியாகி மூன்றே நாட்களில் 100 கோடியை அள்ளியிருக்கும் ஒரு திரைப்படம் தான் விக்ரம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்ற முண்ணனி நடிகர்கள் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கேரளாவில் மட்டும் இந்த படம் 15 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. வெளியான மூன்றே நாட்களில் இத்தனை கோடி வசூலை அள்ளியிருக்கும் படம் என்றால் அது விக்ரம் தான். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இதற்காக அவர் சம்பளம் எதுவுமே வாங்கவில்லை என்ற தகவல் சில நாட்களாக இணையத்தில் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கமல் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தை மாபெரும் வெற்றி அடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார். அதில் கடைசி மூன்று நிமிடங்கள் மட்டுமேவந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா என் மேல் இருந்த அன்பினால் மட்டுமே நடித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது சூர்யா ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் படத்தில் நடித்தற்காக சம்பளம் எதுவும் பெறவில்லை என்பதை கமல் உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும் அவர் சூர்யாவுக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன் என்று கமல் கூறியுள்ளார். இதன் மூலம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை சூர்யா அடுத்த படத்திலும் தொடர்வார் என்று சூசகமாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்களும் காண..watch the below video
Video Courtesy: Tamil Viral Videos 24×7