Categories: சினிமா

கமலை மிரட்டிய உதயநிதி? உதயநிதிக்கு கமல் கொடுத்த அதிரடி பதில் | Vikram Movie

வெளியிட்டது

உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார்.

கமலை மிரட்டிய உதயநிதி? உதயநிதிக்கு கமல் கொடுத்த அதிரடி பதில் | Vikram Movie 1

 

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை-ல் நேற்று நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய உதயநிதி பேசும் போது, சிலர் என்னிடமே போன் செய்து, எப்படியோ கமலை மிரட்டி விக்ரம் படத்தை வாங்கி விட்டீர்களே எனக்கேட்டனர். நான் யாரையும் மிரட்டும் நபரும் இல்லை, மிரட்டினால் பயப்படும் நபரும் கமல்ஹாசன் அல்ல, அவரது ரசிகனாக இந்த படத்தை வெளியிட நினைத்தேன் என்று கூறினார். இதற்கு பதில் அளித்து மேடையில் பேசிய கமல், போன் போட்டு உதயநிதி கேட்ட போது அரசியல் வேறு, இது வேறு என்று தாம் கூறியதாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு நண்பர் எனவும் கூறினார். Youtube Video Code Embed Credits: News Tamil 24X7


நானும் ரஜினியும் தொழிலில் போட்டி போட்டாலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களே, அதே போல தான் மு.க.ஸ்டாலினும் நண்பர் எனக்கூறினார். மேலும் தனக்கு தமிழின் மீது காதல் வர கலைஞரும் ஒரு காரணம் எனக் கூறினார். தாத்தா முதல் பேரன் வரை எனக்கு நட்பு இருப்பதாக கூறி பெருமைப்பட்டார் கமல். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..Watch the Video Below..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்