செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நிகழ்ச்சியில்; உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் வீரத்தையும் சேர சோழ பாண்டியர்கள் பற்றியும் காணொளி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் மாமல்லபுரத்தில் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 188 நாடுகளில் இருந்து 20500 க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் இந்தப் போட்டிகளுக்கான துவக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. உக்ரைனில் நடந்த போர் காரணமாக இந்த போட்டி நடக்குமா? இல்லையா? என்று தெரியாத நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு பல நாடுகள் முயற்சி செய்தன. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த போட்டியை நடத்துவதற்கு தயங்கிய நிலையில், துணிச்சலாக இந்த போட்டிக்காக 100 கோடியை ஒதுக்கி சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்துள்ளார். இது அவருக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் மதியம் குஜராத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கு தனி விமான மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் விமானம் ஏறுவதற்கு சற்று தாமதமானதால் மேடைக்கு சிறிது தாமதமாகவே வந்து சேர்ந்தார். அதற்குள் துவக்க விழா தொடங்கி ஒவ்வொரு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் நபர்கள் பரெய்டை முடித்துவிட்டனர்.
மோடிக்கு நினைவு பரிசாக சென்னை மாமல்லபுரத்தில் இருக்கும் கடற்கரை கோவிலின் பிரதியைப் போலவே உருவாக்கி இருக்கும் சிறிய வடிவிலான சிலையை முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். அதை பார்த்துவிட்டு மோடி முதலமைச்சருக்கு கைகுலுக்கி நன்றி சொல்லிவிட்டு அவரது தோளில் தட்டிக் கொடுத்தார். தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் வீரத்தையும் சேர சோழ பாண்டியர்கள் பற்றியும் காணொளி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Sun News