“திறமை எங்கிருந்தாலும் நானே தேடி செல்வேன்”!! பாடகர் திருவை பத்தல பத்தல பாடலை பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்த கமல்!!ஏ.ஆர்.ரஹ்மான் Institution’இல் சேர்த்து விடுகிறேன்!!

வெளியிட்டது

இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"திறமை எங்கிருந்தாலும் நானே தேடி செல்வேன்"!! பாடகர் திருவை பத்தல பத்தல பாடலை பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்த கமல்!!ஏ.ஆர்.ரஹ்மான் Institution'இல் சேர்த்து விடுகிறேன்!! 1

அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியான 3 வாரங்களில் 350 கோடி வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் வெளியான ஒரு படம் எடுத்த அதிகபட்ச காலெக்ஷன் எடுத்திருந்த மாஸ்டர் படத்தின் வாழ்நாள் காலெக்ஷனை இந்த படம் 3 வாரங்களில் கடந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது விக்ரம் படம்.

பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், சமீபத்தில் மாற்றுத்திறனாளி பாடகர் திருவை சந்தித்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தில் இடம்பெற்ற “கண்ணென கண்ணே” பாடலை படி யூடுபில் வெளியிட்டு மிகவும் பிரபலமடைந்தார். இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் டி.இமான் இருவருமே இவருடைய திறமையை வாழ்த்தி, தங்களுடைய படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார்கள். அதே போலவே இமான் இசையில் வெளியான ஜீவாவின் படமான “சீறு” படத்தில் title track பாடல் திரு பாடியதே.

இப்பொது நடிகர் கமலை சந்தித்துள்ள திரு, அண்மையில் வெளியான “விக்ரம்” படத்தின் “பத்தல பத்தல” பாடலை கமல் முன் மோளம் தட்டி, பாடி காண்பித்துள்ளார். பாடலை கேட்ட கமல் நெகிழ்ச்சியாக விரைவில் நீங்கள் படங்களில் பிஸியாகி விடுவீர்கள் என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை institutionil சேர்த்து விடுவதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். திறமை என்கிறதாலும் அதனை சரியாக கண்டறிந்து அவர்களை எப்போதும் ஊக்கப்படுத்தும் கமலின் இந்த செயலிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி நடிகர் கமலிற்கு மிக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். சில காலமாக துவண்டு போய் காணப்பட்ட அவர் இப்பொது மீண்டும் சுறுசுறுப்பாக போது சேவைகளிலும், படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். விக்ரம் படத்தின் அடுத்த பாகம் ஆரம்பிக்கப்படும் அதற்கும் இவர் தான் இயக்குனர் என லோகேஷை காட்டி ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார்.

அண்மையில் நின்று போன இந்தியன் 2 படம் துவங்கப்படும் என தயாரிப்பாளர் உதயநிதி அறிவித்திருந்தார். அதே போல கமல் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் நாராயணன் அண்மையில் வெளியான “மாலிக்” என்ற ஃபகத் ஃபாசில் படத்தின் இயக்குநராவார். அடுத்து பா.ரஞ்சித் ஏற்கனவே கமலுடன் இணைய போகுற செய்தி வெளியாகியது.

Video Courtesy – Cinema 5D

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்