நடிகர் கமலஹாசன் பிக்பாஸ்ஸில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகி இருந்த காரணத்தினால், தற்போது மீண்டும் இவர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இருந்தும் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக இருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இது 5 சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஐந்து சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்று ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பியது. பிக்பாஸ் வெளிநாட்டில் பிரபலமான பிக் பிரதர் என்ற நிகழ்ச்சி அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு ஆண்டுகளில் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது.

ஐந்து சீசன்களையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். மேலும் அல்டிமேட் என்ற hotstar-ல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். அப்போது திடீரென தனது பட வேலைகளில் கவனம் இருப்பதாக கூறி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். இது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இனிவரும் சீசன்களை அவர் தொகுத்து வழங்கப் போவதில்லையோ என்று ரசிகர்கள் அச்சப்பட்டனர். ஆனால் மீண்டும் சீசன் சிக்ஸை தொகுத்து வழங்க வந்தார் கமலஹாசன். இந்த நிலையில் தற்போது சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி ரேட்டிங் குறைந்ததையடுத்து நாகார்ஜுனா விலக இருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் கமலஹாசனும் இந்த சீசன் 6 விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த சீசன் ஆரம்பமானது முதலே அடிதடி சண்டை என்று இருந்து வருகிறது. சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாலும் டிஆர்பி ரேட்டிங் குறைந்து வருவதாலும் இந்த சீசன் உடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து கமலஹாசன் ஓய்வு பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீசன் முடிந்து வெளியேறுவாரா? இல்லை சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அவர் வெளியேறுவாரா? என்பது குறித்து தெரியவில்லை. தற்போது கமல் கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234 படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும் அவர் அரசியலிலும் இருக்கின்ற காரணத்தினால் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள காரணத்தினாலும், அவர் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பிக்பாஸ் விட்டு விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமலஹாசனே அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.