மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். திமுக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தை வெளியிட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது.

நேற்று மாலை விக்ரம் படத்திலிருந்து கமல் பாடிய பத்தல பத்தல என்றல் பாடல் வெளியாகியது. பாடலை கமல்ஹாசனே எழுதியுள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். அதில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பாடல் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.
கஜானாலே காசில்லே! கல்லாலையும் காசில்லே! காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லாலே! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே! சாவி இருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே! என நீள்கிறது வரிகள்.
இந்த பாடல் இப்போது அரசியல் விவாதமாகிவிட்டது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றன. இப்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் ஒன்றியம் என்ற சொல்லை தனது சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! இவ்வாறு நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.