Categories: சினிமா

படக்குழுவினருக்கு கறி மீன் என ட்ரீட் கொடுத்த கமல்

வெளியிட்டது

நடிகர் கமலின் நடிப்பில் விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. படத்திலிருந்து பாடல்கள் மற்றும் ட்ரையிலர் வருகிறார் 15ஆம் உள்ளது.

இதற்கான வேலைகளில் கமலும் மும்முரமாக இறங்கி உள்ளார். இந்த வேலைகள் மத்தியில் அவர் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை ஆண்ட்ரியா வுடன் சமீபத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்று உணவருந்தி மகிழுந்துள்ளார்.

அசைவ உணவு பிரியரான கமல் அங்கு கிடைத்த மீன் கொழம்பு மற்றும் கரி உணவுகளை சாப்பிட்டு தனக்கு மிகவும் பிடித்தது என அங்குள்ள சமையல்காரருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மீன் வகைகளை விரும்பி சாப்பிடும் அவர் அங்கு கிடைத்த கேரள மீன் தனக்கு மிகவும் பிடித்துள்ளது எனவும் கூறியுள்ளார். கேரளாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விருந்து நடந்துள்ளது. இந்த விடியோவை கமலுடன் சென்ற மற்ற பிறர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.

படக்குழுவினருக்கு கறி மீன் என ட்ரீட் கொடுத்த கமல் 1

விக்ரம் படத்தில் இருந்து முதல் பாடல் வருகிறார் 11ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பத்தல பத்தல என்ற அந்த பாடலை எழுதி பாடியும் உள்ளார் நடிகர் கமல். இதனை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

விகரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்,விஜய் சேதுபதி,ஃபகத் ஃபாசில், நரேன் போன்றோர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். ராஜ் கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது.

Video Courtesy – indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்