பிக்பாஸ் காரணமாக சீரியல் முடிவுக்கு வருகிறது.! உண்மைகளை உடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

வெளியிட்டது

சின்னத்திரை உலகில் பிரபல சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகையே தெரிவித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடர் தற்போது கதை இல்லாமல் திணறி வருகிறது. மேலும் விரைவில் பிக் பாஸ் தொடங்க இருப்பதால் இந்த கதை முடிவுக்கு வரலாம் என்று அதில் நடித்து வரும் கம்பம் மீனா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

பிக்பாஸ் காரணமாக சீரியல் முடிவுக்கு வருகிறது.! உண்மைகளை உடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை 1

 

ஹிந்தி தொடரின் மறு உருவாக்கத்தை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை இதன் இயக்குனர் இயக்கி வருகிறார். தற்போது கதைப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நீண்ட நாள் கோரிக்கையான புது வீட்டை கட்டி முடித்துள்ளனர். அதில் அனைவரும் குடியேறிவிட்டனர். தனத்திற்கு இருந்த மார்பக புற்றுநோயும் சரி செய்யப்பட்டு விட்டது. இதனால் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவே தெரிகிறது. அனைத்து மருமகளுக்கும் குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது இந்த கதையை இத்துடன் முடித்துவிட்டு குழந்தைகள் பற்றிய கதையை பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டாக எடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இது குறித்து இந்த நாடகத்தில் கஸ்தூரி அத்தாச்சியாக நடித்து வரும் கம்பம் மீனா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

பேட்டியின் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா? என்ற கேள்விக்கு முடியலாம் அப்படித்தான் நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டே வருகிறார்கள். பிக்பாஸ் வேறு வர இருப்பதால் முடிவுக்கு வரலாம். எனக்கு சரியாக தெரியவில்லை என்று கூறினார். பின்னர் நான்கு மருமகள்களுக்கும் பிறந்த குழந்தையை வைத்து சீசன் 2 எடுக்கப்பட இருக்கிறதா என்று கேட்க, இருக்கலாம், அப்படி ஒரு ஐடியா இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த தொடர் முடிவடைந்து சீசன் 2 பிக்பாஸ் முடிந்த பிறகு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்