Categories: சினிமா

ஓடிடியில் வெளியான காந்தாரா.! நீக்கப்பட்ட முக்கிய காட்சி.! பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்று சொன்னால் அது காந்தாரா திரைப்படம் தான். இந்த திரைப்படம் பழங்குடியினர் மக்களின் நிலங்களை பிடுங்க நினைத்தால் அந்த தெய்வம் கூட இறங்கி வந்து எதிர்த்து நிற்கும் என்பதுதான் படத்தின் மையக்கருவாக இருந்தது. இந்தப் படம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி இந்தியா முழுவதும் சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்திருந்தது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் வெளியாகிய நிலையில் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நவம்பர் நான்காம் தேதி பொன்னியின் செல்வன் படத்துடன் வெளியாக வேண்டிய இந்த படம் கடைசி நிமிடத்தில் தள்ளி போனது. ஒரு வழியாக நேற்று இரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது காந்தாரா திரைப்படம்.

ஓடிடியில் வெளியான காந்தாரா.! நீக்கப்பட்ட முக்கிய காட்சி.! பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்.! 1

ஆனால் இந்தத் திரைப்படத்தை வெகு நாட்களாக எதிர் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் படம் ஓடிடியில் வெளியான பிறகு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் வராஹ ரூபம் என்கிற பாடல் இந்த படத்தில் இடம்பெறவில்லை. பொன்னியின் செல்வன் படத்தையும், காந்தாரா படத்தையும் ஒரு சேர வெளியிட்டால் இரண்டு படங்களும் சரியாக ஓடாது என்கிற காரணத்தினால் முதலில் பொன்னியின் செல்வனை இறக்கிவிட்டு பின்னாலேயே காந்தாரா படத்தை களம் இறக்கி இருந்தது அமேசான் பிரைம் நிறுவனம். இதற்காக #kantaraonprime என்ற ஹேஷ்டேக்கும் நேற்று முதல் ட்ரெண்டாகி வந்தது. இந்த நிலையில் நேற்று சரியாக இரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடியில் காந்தாரா திரைப்படம் வெளியானது.

கேரளாவை சேர்ந்த தாய்குடம் பிரிட்ஜ் என்கிற மியூசிக் ட்ரூப் வெளியிட்ட நவரசம் என்கிற பாடலை அப்படியே காப்பி அடித்து இருந்ததாக கூறி வராஹ ரூபம் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த பாடலுக்காகவே பல ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அனைவரையும் ஏமாற்றும் விதமாக பாடல் நீக்கப்பட்டு இருந்தது. கோர்ட்டு உத்தரவினால் இந்த படத்தில் இருந்து பாடல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும் youtube போன்ற வலைதளங்களிலும் இந்த பாடலை நீக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டிருந்த போதிலும் சிலர் இந்தப் பாடலை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இந்தப் பாடலுக்காக தான் இந்த படத்தை பார்க்க வந்தோம் ஆனால் இந்தப் பாடல் இல்லாதது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்