இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி சென்ற இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற மன்னிப்பு பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : SAREGAMA TAMIL