Categories: சினிமா

வேட்டையனுக்கு பயந்து தள்ளி சென்ற கங்குவா..? வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

வெளியிட்டது

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படகுழு அறிவித்து இருந்தது.

வேட்டையனுக்கு பயந்து தள்ளி சென்ற கங்குவா..? வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..! 1

இந்நிலையில் தற்போது அதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய வேட்டையன் படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் படம் என்றால் எப்பொழுதும் தனி மதிப்பு ரசிகர்களிடம் உள்ளது. இதனால் அவருடன் மோதுவதற்கு பலரும் பயந்து வருவது வழக்கம். நடிகர் அஜித் மற்றும் விஜய் படங்கள் மட்டுமே இதுவரை சூப்பர் ஸ்டார் படங்களுடன் மோதி இருக்கிறது.

இந்நிலையில் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் மற்றும் வசூலுக்கும் இடையூர் வரும் என்பதால் கங்குவா படத்தை ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி காட்டுத்தீ போல பரவுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்