இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இன்று பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

படத்தின் கதை
நிகழ் காலத்தில் சூர்யா ஒரு பவுண்டி ஹன்டராக வலம் வருகிறார். கேஸ் எஸ் ரவிக்குமார் கூறும் வேலைகளை செய்து வருகிறார். அப்போது சிறுவன் ஒருவன் சூர்யாவை தேடி வருகிறார். அந்த சிறுவனை ரஷியர்கள் தூக்கி செல்கின்றனர். அதே சமயத்தில் படத்தை கற்காலத்திற்கு நகர்த்தி, அங்கு ரோமானிய அரசன் ஐந்து நிலங்களை கைப்பற்ற முயற்சி செய்கிறான். இதில் கற்களை சூர்யா வாழும் பெருமாச்சி நிலத்திற்கும், வில்லன் வாழும் அராத்து நிலத்திற்கும் இடையே போர் வருகிறது. போரில் வெற்றிபெற்றது யார், நிகழ்கால சூர்யாவுக்கும் இந்த போருக்கும் என்ன சம்மந்தம், சூர்யாவை தேடி வந்த நிகழ்கால சிறுவன் யார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் விமர்சனம்
படத்தை முழுவதுமே சூர்யா தனது தோளில் தாங்கி நடித்து இருப்பது பிரமாதம். கற்கால கங்குவாவாக வரும் சூர்யா நடிப்பில் மிரட்டி எடுத்து உள்ளார்.இரண்டு கதைகளிலும் சூர்யா தனது நடிப்பினை காண்பித்து இருக்கிறார்.சிறுத்தை சிவா எடுத்துக்கொண்ட கதை சரியாக இருந்தாலும், அதன் ஆழத்தை இன்னும் அதிகரிக்க செய்து இருக்கலாம். சிவா படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகளவில் பார்வையாளர்கள் உடன் கனெக்ட் ஆகும் நிலையில், அது கங்குவாவில் ஒர்கவுட் ஆகவில்லை.படத்தில் கத்திகொண்டே இருப்பது ரசிகர்களை கடும் எரிச்சலடைய வைத்து உள்ளது. ஒருகட்டத்திற்கு மேல் படத்தில் என்ன நடக்கிறது என்பதையே உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு இரைச்சல் அதிகமாக உள்ளது. 3டி கிராபிக்சில் தன்னால் முடிந்ததை காண்பித்து உள்ளார். மொத்தத்தில் படத்தில் திரைக்கதையை ஆழப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் அதிகமாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.