நம்ம எதிர் நீச்சல் கனிகாவா இது? ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் போட்டு இந்த குத்தாட்டம் போடுறாங்களே.!

வெளியிட்டது

எதிர்நீச்சலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் கிச்சனை சுத்தம் செய்து விட்டு அந்த குஷியில் அங்கேயே நின்று கொண்டு மரண குத்தாட்டம் போட்டிருக்கிறார். தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் அந்த படத்தில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களை வென்றார். பின்னர் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் படத்திற்கு பின்னர் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் வேறு எந்த தமிழ் படமும் நடிக்கவில்லை. பின்னர் முழுவதுமாக மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடிப்பதிலிருந்து மிகப்பெரிய இடைவேளை எடுத்துக் கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்ம எதிர் நீச்சல் கனிகாவா இது? ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் போட்டு இந்த குத்தாட்டம் போடுறாங்களே.! 1
நடித்துக் கொண்டிருந்த போதே பல நடிகைகளுக்கு பின்னணி பேசி இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் படத்தில் ஜெனிலியாவிற்கும், அந்நியன் படத்தில் சதாவிற்கும், பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் ஸ்ரேயாவிற்கும் அவர் பின்னணி பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு படங்களில் அவர் பின்னணி பாடலும் பாடியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வந்த அவர், சென்னை சில்க்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், ஆச்சி மசாலா போன்ற பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் அவர் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் பாவமான பெண்ணாக நடித்து வருகிறார். இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக கனிகாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.


சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கனிகா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தியும், வீடியோக்கள் வெளியட்டும் ரீல்ஸ் செய்தும் அதை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் தன்னுடைய சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு அந்த குஷியில் ஒரு ஆட்டம் போடுகிறார். மேலும் சாண்டி மாஸ்டரை டேக் செய்து இந்த நடனம் ஓகேவா என்றும் அவர் கேட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு லைக்குள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்