Categories: சினிமா

மரியாதையா வாரிசு படத்தை ஓட்டு.! தெலுங்கு தயாரிப்பளர்களை வெளுத்து வாங்கிய கஞ்சா கருப்பு

வெளியிட்டது

வாரிசு படத்தில் பிரச்சனைக்கு எதிராக தற்போது காமெடி நடிகர் கஞ்சா கருப்பு குரல் கொடுத்துள்ளார். உங்களுடைய படங்கள் மட்டும் இங்கு ஓட வேண்டும். ஆனால் எங்களுடைய படங்களை நீங்கள் ஓட வைக்க மாட்டீர்களா என்று கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இளைய தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்தான் வாரிசு. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளில் வெளியிட வேண்டும், டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்று ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரியாதையா வாரிசு படத்தை ஓட்டு.! தெலுங்கு தயாரிப்பளர்களை வெளுத்து வாங்கிய கஞ்சா கருப்பு 1

இந்த கருத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பான் இந்தியா படங்கள் எடுக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் இவ்வாறு செய்வது முறையல்ல என்று கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. தெலுங்கு படங்களின் பல டப்பிங் படங்கள் தமிழகத்தில் மிகப்பிரமாண்டமான வசூலை குவித்து இருக்கின்றன. குறிப்பாக பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் எல்லாம் மிகப்பெரிய வசூலை பெற்றிருந்தன. இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்களின் இந்த முடிவை கண்டித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டன தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறது. வரும் புதன்கிழமை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறது.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவால் வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தெலுங்கு திரையுலகை கடுமையாக சாடியிருக்கிறார். பாகுபலி பரதேசி புலி என்று உங்கள் படங்கள் பல இங்கு வந்திருக்கிறது. ஆனால் எங்கள் படம் தெலுங்கு ஆந்திராவில் ஓடி காசு சம்பாதிக்க கூடாதா? எங்களுடைய தளபதி நடித்த படம் அங்கு பெரிய அளவில் வசூலை குவித்து இருக்கிறது. மரியாதையாக வாரிசு படத்தை ஓட்டுங்க என்று மிகவும் கோபமாக அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below Video..!

 

Youtube Video Code Embed Credits: news2 Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்