Categories: சினிமா

கஞ்சா பூவுனு எழுதுனது தப்பு தான்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்.!

வெளியிட்டது

நடிகர் கார்த்திக் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் தான் விருமன். இந்த படத்தை கொம்பன் தேவராட்டம் போன்ற படங்களை இயக்கி இருந்த இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சூரி கோயில்கள் கட்டுவதை விட, பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசினார். அது ஒரு புறம் சர்ச்சையானது. பின்னர் இந்த படத்தின் கதாநாயகியான அதிதி, இயக்குனர் ஷளங்கரின் இளைய மகளாவார். இவர் முதல் படம் விருமன் வெளியாவதற்கு முன்பாகவே, அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட் ஆனார். இதுவும் ஒரு புறம் சர்ச்சையானது. ஷங்கரின் மகள் என்பதற்காவே சலுகை காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்தது விருமன் படம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கஞ்சா பூவுனு எழுதுனது தப்பு தான்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்.! 1

இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து புதிதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதில் கஞ்சா பூவு கண்ணால என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் அதிதியும் கார்த்திக்கும் மிக அருமையாக நடனமாடியிருப்பார்கள். இந்தப் பாடல் வெளியான போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் இந்த பாடலுக்கு அதிதி மற்றும் கார்த்தி போலவே உடை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வந்தனர். இதனால் இந்த பாடல் மிகப் பிரபலமடையவே பல லட்சம் பார்வையாளர்களை அள்ளியிருந்தது. திடீரென ஒரு நாள் படம் வெளியான பிறகு இந்தப் பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கஞ்சா பூவு என்று ஏன் எழுதுகிறீர்கள்? இன்றைக்கு கஞ்சா பூ என்று எழுதுவீர்கள் நாளை அபின் கொக்கைன் என்று எழுதுவீர்களா? என்று சில சமூக அமைப்புகள் இந்த பாடலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். போதைப் பொருளிலிருந்து வெளியே வரவேண்டும் என்று பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற பாடல்கள் அவர்களை மீண்டும் போதைக்கு அடிமையாக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்தப் பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் மணிமாறன் என்பவர், இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பெண்களின் கண்கள் மயக்கும் தன்மை உடையவை என்பதால் அதை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். பாடலின் வரிகள் உவமைக்காக கூறப்பட்டது தான் இருந்தாலும், அது தவறான வார்த்தை தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக பகிரங்கமாக மன்னிப்பும் கூறினார் பாடல் ஆசிரியர் மணிமாறன். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below Video…

YouTube Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்