தாலி கட்டிய பின்பு மனைவி நெற்றியில் முத்தமிட்ட நவீன்..வெக்கத்தில் சிவந்த கண்மணி..அடுத்த Cute Pair

வெளியிட்டது

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் நவீன். இவர் இதற்கு முன் டிக்டாக்கில் வீடியோக்கள் செய்து வந்தார். பின்னர் சின்னத்திரையில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயள பல ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கும் இவருடன் நடிக்கும் பிந்து என்பவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் நவீன் பிந்து இருவரும் நாங்கள் நண்பர்கள் மட்டுமே, திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலி கட்டிய பின்பு மனைவி நெற்றியில் முத்தமிட்ட நவீன்..வெக்கத்தில் சிவந்த கண்மணி..அடுத்த Cute Pair 1

பின்னர் நவீனுக்கும் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணிக்கும் திருமணம் முடிவானது. நவீன் மற்றும் கண்மணி குடும்ப நண்பர்கள். இருவரும் மீடியா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனேவ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 9 வரவேற்பும், ஜூன் 10 திருமணமும் நடைபெறும் என்று நவீன் அறிவித்து இருந்தார். அதன்படி இருவருக்கும் சென்னையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஏற்கனவே சின்னத்திரையில் செந்தில்-சைலஜா, சஞ்சீவ்-ஆல்யா, சித்து-ஸ்ரேயா போன்ற பல க்யூட் ஜோடிகள் இருக்கும் நிலையில் தற்போது நவீன் கண்மணியும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளனர். தாலி கட்டிய பின்பு நவீன் செல்லமாக தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுள்ளார். அவர்களின் திருமண வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நவீன் கண்மணி ரசிகர்கள் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Galatta Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்