நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். ஆந்தாலஜி கதை அமைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்து அவர் கூறியதாவது, “நான்கு பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கிராமத்தில் படித்த பெண்ணாக வரும் அம்மு அபிராமியின் கதையில் அவருடைய அம்மா அவருக்கு வரும் வரன்களை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். இரண்டாவதாக ஒரு பெண் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வழக்கில் வாதாடும் வக்கீல் உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு விவாகரத்து கொடுத்துவிட்டு, வக்கீலை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். மூன்றாவதாக ஐடி கம்பெனியில் ஒரு வேலை பார்க்கும் பெண் ஒருவர் காதல், கல்யாணம் எதற்கும் ஓகே சொல்லாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் ஒருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்தப் பையன் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். அதேபோல இன்னொரு பெண் அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருவருடன் ஏற்பட்ட காதலின் காரணமாக கர்ப்பம் ஆகிறார். பின்னர் இவர்களுக்குள் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை. இப்போது மட்டும் தற்போது மதுரையை எரித்த கண்ணகி உயிருடன் இருந்திருந்தால் இந்த கதையை எழுதியவர்களை தீயிட்டு கொளுத்தி இருப்பார்.
முதலில் வரும் பெண்ணின் தாயார் எதற்காக வரன்களை வேண்டாம் என்கிறார்? இரண்டாவதாக வரும் பெண் எதற்காக வாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பின்னர் விவாகரத்து கொடுக்கிறார்? மூன்றாவதாக வரும் பெண் எதற்காக லிவ்விங் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்? நான்காவதாக வரும் பெண் ஏன் அந்த நபருடன் சேர்ந்து வாழாமல் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்கிறார்? என்று எந்த விதமான ஆணித்தரமான பின்னணியும் இல்லாமல் இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் பார்க்கும் பார்வையாளர்களை ஒரு க்ளைமேக்ஸை காட்டி இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அப்படி இருந்தால் படம் சரியாக ஓடாது.
இதே கதையைம்சத்துடன் ‘கேர் ஆஃப் காதல்’ என்கிற ஒரு படம் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அவர்கள் வடிவமைத்திருந்தனர். ஆனால் இந்த படத்தின் கதை அப்படியில்லை. இயக்குனர் தன்னை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும். இந்த படத்தில் மயில்சாமி, அம்மு அபிராமியின் கதாபாத்திரங்களை தவிர மற்ற அனைவரின் நடிப்பும் ஓவர் ரேட்டிங்காக இருந்தது. படத்தின் ஐடியா ஓகே, ஆனால் பார்வையாளர்களை வற்புறுத்தக் கூடாது. இயற்கையாக விட்டிருந்தால் இந்த படம் நன்றாக வந்திருக்கும். ஆனால் வாய்ப்பு நழுவி விட்டது” என்று தனது விமர்சனங்களை முன்வைத்தார். நீங்களும் அவரின் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies