ஈரமான ரோஜாவேத் தொடரைத் தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்..! விரைவில் எண்டு கார்டு

வெளியிட்டது

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சியாக இருந்து வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கிறது. இதில் பல சீரியல்கள் முடிவு பெறும் இருக்கும் தருவாயில் இருக்கின்றன. பல புது சீரியல்களின் வரவால் பழைய சீரியல்கள் பலவற்றை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது.

ஈரமான ரோஜாவேத் தொடரைத் தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்..! விரைவில் எண்டு கார்டு 1

முன்னதாக இந்த வாரம் வெளியாகி இருந்த ப்ரோமோவில், ஈரமான ரோஜாவே சீசன் 2 விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த்து. இதற்கிடையில் தற்போது அடுத்த தொடரும் முடிவுக்கு வர இருக்கும் செய்தி ரசிகர்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சமீபத்தில் மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்த ‘காற்றுக்கென்ன வேலி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகிய இரண்டு முக்கிய தொடர்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து ‘தென்றல் வந்து என்னை தொடும்’ தொடருக்கும் எண்டு கார்டு போடப்பட்டது. இந்த வாரத்துடன் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ வும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 

இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் கடைசி அத்தியாயங்களை காணத் தவறாதீர்கள் என்று சொல்லி ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது ‘ஈரமான ரோஜாவே’ டீம். தொடர்ந்து புதிய சீரியல்கள் வர இருப்பதால் அடுத்த இன்னொரு சீரியலையும் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது விஜய் டிவி.

வருகிற டிசம்பர் 4ம் தேதி முதல் ‘சக்திவேல்’ என்கிற புத்தம் புதிய தொடர் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே மதியம் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணே கலைமானே’ தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த நந்தா சமீபத்தில் சீரியலை விட்டு விலகியிருந்தார். அதன்பின்னர் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நவீன் நடித்து வருகிறார். இருப்பினும் டிஆர்பியில் பெரிய வரவேற்பு பெறாத இந்த தொடரை விரைந்து முடிக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்