விஜய் டிவியில் ‘கண்ணே கலைமானே’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பவித்ராவுக்கும், சன் டிவி சீரியல் ஹீரோ ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கும் செய்தி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணே கலைமானே’ சீரியலில் பானு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பவித்ரா அரவிந்த் தனது காதலரை அறிமுகம் செய்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கப்பெண்ணே’ சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அமல் ஜித்தை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
‘சிங்கப்பெண்ணே’ சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஒரே மாதத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து சாதனை படைத்த தொடராக இருந்து வருகிறது. இதில் அமல் ஜித் – அன்பு என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்க, மனிஷா மகேஷ் – ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அமல் ஜித் ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அம்மன்’ என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது பவித்ரா அரவிந்த் மற்றும் அமல்ஜித்துக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது இவர்கள் இருவருமே காதலை உறுதி செய்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டதால், விரைவில் இந்த தம்பதிகள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
பவித்ரா மற்றும் அமல்ஜித் ஜோடிகளுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.