Categories: சினிமா

அடுத்த சம்பவத்துக்கு தயாரான ரிஷப் ஷெட்டி.! ‘ காந்தாரா’ பாகம் 2ன் First லுக் போஸ்டர் வீடியோ.!

வெளியிட்டது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படத்தின் பாகம் இரண்டின் முதல் பார்வையை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். ‘காந்தாரா’ திரைப்படம் கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம்தான் ‘காந்தாரா’. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகம் இரண்டிற்கான பணிகளை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், முதல் பார்வை போஸ்டரை தற்போது சின்ன டீசர் போல படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். டீசர் வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சம்பவத்துக்கு தயாரான ரிஷப் ஷெட்டி.! ' காந்தாரா' பாகம் 2ன் First லுக் போஸ்டர் வீடியோ.! 1

ஹூம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் செட்டி, கிஷோர், சப்தமி கெளடா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தில் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. மேலும் சில ஆய்வுகள் செய்து இந்த படத்தை எடுக்க வேண்டிய இருப்பதால் படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதமாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆகஸ்ட் மாதம் தொடங்க வேண்டிய இந்த ஷூட்டிங் தற்போது நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயிருக்கிறது.

இந்த படத்தின் திரைக்கதை வேலைப்பாடுகள் அனைத்தையும் முடித்துள்ள நிலையில் படம் இன்றைக்கு பூஜையுடன் துவங்க உள்ளது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனமாக ஹூம்பாலே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ‘காந்தாரா’ பாகம் இரண்டு படத்திற்கு ‘காந்தாரா சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Credits: Hombale Films

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்