Categories: சினிமா

மலையாள பாடலை அப்படியே காபி அடித்துள்ள வராஹ ரூபம்.! தடை விதித்த நீதிமன்றம்.!

வெளியிட்டது

கன்னடத்தில் வெளியாகி உலகம் எங்கிலும் சக்கை போடு போட்டு வரும் காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள வராக ரூபம் பாடலுக்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவை சேர்ந்த பிரபல இசை குழுவான தாய் குடம் பிரிட்ஜ் உருவாக்கிய நவரசம் என்கிற பாடலை அப்படியே காப்பி அடித்து இந்த பாடல் உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தற்போது இந்த பாடலுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் தடை விதித்துள்ள செய்தி தற்போது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. மலைவாழ் மக்களின் நிலங்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை முறை, சிறு தெய்வ வழிபாடு குறித்தும் மிக அழகாக எடுத்துக்காட்டியிருந்த படம் தான் காந்தாரா. பூர்வ குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பிடுங்க நினைத்தால் அந்த தெய்வம் கூட இறங்கி வந்துவிடும் என்பதை தான் இந்த படம் அழகாக எடுத்துக்காட்டிருந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். !

மலையாள பாடலை அப்படியே காபி அடித்துள்ள வராஹ ரூபம்.! தடை விதித்த நீதிமன்றம்.! 1

இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான இந்த படம் முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியானது. கர்நாடகாவில் மட்டுமே 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்திருந்ததால், இந்த படத்தை மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் இந்த படம் இந்தியாவின் மாஸ்டர் பீஸ் என்று கூட பாராட்டி இருந்தார். இந்த நிலையில் பலருக்கும் மனம் கவர்ந்த கிளைமாக்ஸ் பாடலான வராக ரூபம் பாடல் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது.

கேரளாவை சேர்ந்த பிரபல இசை குழு தாய் குடம் பிரிட்ஜ் என்பவர்கள் 2017 ஆம் ஆண்டு நவரசம் என்கிற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டிருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் பாடலை அப்படியே காப்பி அடித்து வராக ருபம் பாடலை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தாய் குடம் பிரிட்ஜின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை ஒளிபரப்பிய தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இசை ஸ்ட்ரீமிங் தளங்களான அமேசான், spotify, youtube, jio saavn, wynk music போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் இரண்டு பாடல்களையும் ஒப்பீடு செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அப்படியே நவரசம் பாடலை காப்பி அடித்து வராக ரூபம் பாடல் எடுக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..! 

Youtube Video Code Embed Credits: Makkachi

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்