சூர்யாவின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கங்குவா படக் குழுவினர் தற்போது அடுத்த சர்ப்ரைஸ் ஒன்றை சூர்யா ரசிகர்களுக்காக கொடுத்திருக்கின்றனர். இன்று காலை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருந்த படக் குழுவினர், தற்போது அடுத்ததாக பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்திருக்கின்றனர்.

நடிகர் சூர்யா தற்போது தனது 39-ஆவது திரைப்படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சுமார் ஐந்து வேடத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. எஸ் ஜே சூர்யா குரலில் தொடங்கிய இந்த வீடியோ இறுதியில் சூர்யா அருகில் வந்து நலமா என்று கேட்பதோடு முடிவடைந்திருந்தது. உண்மையில் கங்குவா படத்திற்காக மிக நாட்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாகவே அமைந்திருந்தது.
கடைசியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே இந்த படத்தை மிக கவனத்துடன் இயக்கி வருகிறார் சிவா. இந்த படம் பான் இந்தியா படமாக வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒரு அப்டேட் வெளியாகும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் twitter பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
அதில் கையில் கத்தியுடன் குதிரை மீது போர்க்களத்தில் சூர்யா நின்று இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் இந்த படம் தரமான ஒரு பீரியாடிக் படமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Youtube Video Embed Code Credits: Saregama Tamil