Categories: சமூகம்

கர்நாடகாவில் மழையா‌ல் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது!!

வெளியிட்டது
கர்நாடகாவில் மழையா‌ல் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது!! 1

தென்மேற்கு பருவ மழை கர்நாடகாவின் பல இடங்களில் வெளுத்து வாங்கியது. கனமழையால் கர்நாடகாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதங்கள் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உறவுகள், உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகமாக பெரும் சேதம் ஏற்பட்டது.

வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், வட கர்நாடகத்தை மழை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

வடகர்நாடகத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்