Categories: சினிமா

“எப்போது என தெரியவில்லை விக்ரமை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்!!கைதி டில்லி நடிகர் கார்த்தி போட்டுள்ள வைரல் ட்வீட்!!

வெளியிட்டது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கவுரவத் தோற்றத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

"எப்போது என தெரியவில்லை விக்ரமை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்!!கைதி டில்லி நடிகர் கார்த்தி போட்டுள்ள வைரல் ட்வீட்!! 1

படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒவ்வொரு காட்சியையும் இன்ச் பை இன்ச்சாக ரசித்து வருகின்றனர் ரசிகர்கள். படத்தில் யாரை புகழ்வது என்றே தெரியவில்லை, அந்தளவுக்கு லோகேஷ் கனகராஜ் அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

இதேபோல் அனிருத்தின் இசையையும் பாராட்டி தள்ளியுள்ளனர். இந்நிலையில் நடிகரும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி விக்ரம் படம் குறித்து டிவிட்டியுள்ளார். அதில் கமல் சாரின் ஆக்‌ஷன் அவதாரத்தைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை. படத்தைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைக் கேட்கிறேன்! இயக்குநர் லோகேஷ் மற்றும் படக்குழு அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

கார்த்தியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்கள் அண்ணன் சூர்யா பட்டையை கிளப்பியுள்ளார். உங்களின் கேமியோவைதான் மிஸ் பண்ணிவிட்டோம். விக்ரம் 3யில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த படம் கார்த்தியின் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான “கைதி” படத்தின் நீட்சியாக இது வெளியாகி உள்ளது. அந்த படத்தில் அழிக்கப்படும் போதை பொருள்களை, அழித்த போலீஸ் அதிகாரியை பழி வாங்க துடிக்கும் வில்லனுக்கும் தடுக்க முற்படும் போலீஸ்’க்கும் நடக்கும் போராட்டமே படத்தின் மொத்த கதை.

“விக்ரம்” படத்தில் அடுத்த படத்திற்கான லீட்டை வைத்து முடித்துள்ள லோகேஷ், அடுத்து நடிகர் விஜயுடன் ஒரு படத்தில் இணைய உள்ளார். ரசிகர்கள் இப்பொது விஜயும் இந்த படத்தில் மூலம் லோகேஷின் சினிமா உலகில் நுழைந்து வில்லன்களுடன் சண்டை போடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அது நடக்குமோ? இல்லையோ? ஆனால் கண்டிப்பாக கமல், கார்த்தி கூட்டணி இணைத்து சூர்யாவுடன் சண்டை போடுவது மட்டும் உறுதி. இதை எப்போது அவர் எடுப்பார், எப்போது பார்க்க முடியும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

 

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்