“மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி”!! நடிகர் கார்த்தியுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வெளியீடு!!

வெளியிட்டது

நீண்ட ஆண்டுகள் துணை நடிகராக இருந்து, பின் மெல்ல குறும்படங்களில் நாயகனாக நடித்து இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் தனுஷ், கார்த்தியுடன் பின்னணியில் நடித்து, நாயகனாக உருமாறி இப்பொது இந்திய அளவில் முக்கிய நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தனுஷின் “புதுப்பேட்டை”, கார்த்தியின் “நான் மகான் அல்ல” போன்ற படங்களில் சின்ன பாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இயக்குனர் சீனுராமசாமி இவரை “தென்மேற்கு பருவக்காற்று” படம் மூலம் நாயகனாக்க, கார்த்திக் சுப்பராஜ் இவரை “பிட்சா” படம் மூலம் மக்களிடம் கொண்டுசேர்த்தார்.

"மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி"!! நடிகர் கார்த்தியுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வெளியீடு!! 1

தொடர்ந்து “சூத்து கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விக்ரம் வேதா, நானும் ரௌடி தான் சேதுபதி, தர்மதுரை” என நாயகனாக கலக்கிய போதும், நடுவில் ரஜினியுடன் “பேட்ட” விஜயுடன் “மாஸ்டர்” இப்பொது கமலுடன் “விக்ரம்” போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து நாயகனாகவும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வில்லனாகவும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் கவனம் இருக்கும் நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. சென்ற வாரம் வெளியான “மாமனிதன்” படமும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றொரு முக்கிய நாயகனுடன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் கார்த்தியின் நடிப்பில் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் நடிகர்கள் கார்த்தியும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி எந்த விதமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிகபட்சமாக அவர் வில்லனாகவே நடிக்கவுள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்க வருகின்றன. கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் “விருமன்”, மித்திரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “சர்தார்”, மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்யுடன் நடிகர் கார்த்தியும் இணைந்து நடித்துள்ள “பொன்னியின் செல்வன் 1” என 3 படங்களும் இந்த ஆண்டிலேயே வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பொது கார்த்தி மற்றும் விஜய சேதுபதி படத்தின் அதிகாரப்பூரவ தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது படத்திற்கு தற்போது “ஜப்பான்” என பெயரிட்டுள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்