Categories: சினிமா

முதல் முறையாக வருங்கால கணவரின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கார்த்திகா நாயர்.!

வெளியிட்டது

தமிழில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராதா. இவர் தற்போது திரை உலகை விட்டு விலகி இருந்த போதிலும் தனது இரு மகள்களையும் நடிகையாக மாற்றி விட்டு சென்றிருக்கிறார். தற்போது அதிகபட்சமாக ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கெடுத்து வருகிறார் ராதா. இவரின் மூத்த மகள் ராதிகா நாயருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்த கார்த்திகா நாயர் தற்போது தனது வருங்கால கணவரின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

முதல் முறையாக வருங்கால கணவரின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கார்த்திகா நாயர்.! 1

கே.வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார் கார்த்திகா நாயர். இவரது தங்கை துளசி நாயர் மணிரத்தினம் இயற்றிய ‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இருவரும் சில படங்களில் மட்டுமே நடித்தனர். என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் திரை துறையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. 2015ம் ஆண்டிற்கு பின்னர் கார்த்திகா நாயர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். மும்பையில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் என்ற கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த அவர், பின்னர் தனது தந்தையுடன் இணைந்து தொழில்களை கவனித்து வருவதாக கூறப்பட்டது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் ஆண் ஒருவரை கட்டிப் பிடித்து இருக்கும்படி கையில் மோதிரத்துடன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த நபர் யார் என்று தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இன்று நிச்சயம் முடித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

ரோஹித் மேனன் என்பவருடன் விரைவில் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. ரோஹித் மேனன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தொழிலதிபரா? நடிகரா? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்