Categories: சினிமா

மகள் திருமணத்தை சத்தம்மில்லாமல் நடத்தி முடித்த கருணாஸ்.! இதோ வீடியோ மற்றும் புகைப்படங்கள்.!

வெளியிட்டது

நடிகர் கருணாஸ் தற்போது தனது மகளுக்கு சத்தம் இல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கருணாஸின் மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திரை பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் கருணாஸ். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் தனது 12 வயதில் கானா பாடகராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் யூகி செய்து நடத்திய நையாண்டி தர்பார் என்கிற நிகழ்ச்சியில் இசை கலைஞராக இருந்தார். 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா என்ற படத்தின் மூலமாக முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் லொடுக்கு பாண்டி என்கிற ரோலில் இவர் நடித்து புகழ்பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து இவர் பாபா, பிதாமகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பொல்லாதவன், போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகள் திருமணத்தை சத்தம்மில்லாமல் நடத்தி முடித்த கருணாஸ்.! இதோ வீடியோ மற்றும் புகைப்படங்கள்.! 1


பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான திண்டுக்கல் சாரதி என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளைபுரம், லொடுக்கு பாண்டி போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னர் காமெடியனாகவே தொடர்கிறார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கட்டாகுஸ்தி. இந்த படத்தில் இவர் ஹீரோவிற்கு மாமா கதாபாத்திரத்தில் பிற்போக்கு தனங்கள் நிறைந்த கேரக்டராக நடித்து அசத்தியிருப்பார். இது மட்டும் இல்லாமல் சில படங்களுக்கு அவர் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பல படங்களில் பாடியும் இருக்கிறார். இவருடைய மனைவி கிரேஸ் கருணாஸ் ஒரு பின்னணி பாடகர் ஆவார். அவரும் பல படங்களில் பாடியிருக்கிறார். இவருடைய மகன் கென் கருணாஸ் அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கருணாஸின் மூத்த மகள் டயானாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.


பெங்களூருவில் வைத்து அந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. சர்ச்சில் வைத்து நடைபெற்ற அந்த திருமணத்திற்கு பிரபலங்கள் யாரையும் அழைக்காமல், சத்தம் இல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் கருணாஸ். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கென் கருணாஸ் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குள் குவிந்து வருகிறது. மேலும் கருணாஸின் ரசிகர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the Video Below..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்