“இறுதி வரை உடன் வரும் தோழி கிடைத்துவிட்டார்” திருமண வீடியோவை பகிர்ந்த கவின்.!

வெளியிட்டது

பிக் பாஸ் கவினுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் திருமண வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் கவின். கடைசிவரை உடன் வரும் நண்பர் கிடைத்துவிட்டார் என்று அவர் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவை மட்டும் சுமார் 18 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். மேலும் வீடியோவிற்கு ஐந்து லட்சம் லைக்குகளும் குவிந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இறுதி வரை உடன் வரும் தோழி கிடைத்துவிட்டார்" திருமண வீடியோவை பகிர்ந்த கவின்.! 1

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களின் மூலமாக பிரபலமானவர் நடிகர் கவின். பின்னர் இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸின் அந்த சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார். வெளியே வந்த பின்னர் டாடா, லிஃப்ட் போன்ற படங்களில் நடித்தார். டாடா படத்திற்கு பின்னர் கவினின் செல்வாக்கு அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கவினுக்கு அவரது நண்பர் மோனிகாவுடன் இருபதாம் தேதி திருமணம் முடிந்தது. திருமண புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று திருமண வீடியோவை வெளியிட்டு என்னுடன் கடைசி வரைக்கும் வரும் ஒரு நண்பர் கிடைத்துவிட்டார் என்று பதிவிட்டு இருக்கிறார். உங்களையெல்லாம் வாழ்க்கையில் பெற்றதற்கு வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்