நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கனா காணும் காலங்கள் என்கிற சீரியலின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானவர் கவின். இவருக்கு திருப்புமுனையை கொடுத்த ஒரு தொடர் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி பல லட்சம் மனங்களில் இடம் பிடித்திருந்தார் கவின். பின்னர் சில காலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 3ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் ரூபாயுடன் பாதியிலேயே வெளியேறி இருந்தார் கவின். அதன் பின்னர் லிஃப்ட், டாடா என்கிற இரண்டு படங்களில் நடித்தார். இதில் டாடா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் கவின். தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் பேனர் சார்பில் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகிய இருவர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தில் இருந்து குட்டி ப்ரோமோ ஒன்றை டீசர் போல படக்குழு வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television