கயல் சீரியலில் மீண்டும் ஒரு விலகல்.! சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த முக்கிய பிரபலம்.!

வெளியிட்டது

கயல் சீரியலில் இருந்து தற்போது மற்றொரு நடிகர் விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்தான் கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவும் நடித்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடரில் ஒன்றாகவும், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு பல இல்லத்தரசிகள் ரசிகைகளாக இருக்கின்றனர். குறிப்பாக இந்த தொடரின் கதாநாயகியாக இருக்கும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் சைத்ராவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

கயல் சீரியலில் மீண்டும் ஒரு விலகல்.! சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த முக்கிய பிரபலம்.! 1

தனது குடும்பத்தில் தனி ஒரு பெண்ணாக இருந்து உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வரும் கதாபாத்திரத்தில் சைத்ரா நடித்து வருகிறார். மருத்துவமனையில் செவிலியராக கயல் வேலை பார்த்து வருகிறார். கயல் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியும், கயலை காதலிக்கும் எழில் கதாபாத்திரத்தில் சஞ்சீவை சுற்றியும் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கயல் நாடகத்தில் கயல் தம்பியாக நடித்து வந்த அவினாஷ் சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக ஹரி என்பவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். தற்போது ஹரியும் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

 

ஹரி நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜீவா என்பவர் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. சமீபகாலமாக தொடர்ந்து சீரியல்களில் இருந்து விலகல்கள் நடைபெற்று வருகிறது. கயல் சீரியலில் கயலின் தங்கையாக நடித்து வந்த அபிநவ்யா கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அடுத்ததாக அவினாஷ் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக நடிக்க வந்த ஹரியும் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிக்கு பதிலாக புதுமுக நடிகர் ஜீவா என்பவர் நடிக்க இருப்கதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்