சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஆர்த்தியின் கழுத்தில் எழில் தாலி கட்டவில்லை. அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் தாலி கட்டியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதனால் கயல் எழில் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி பல லட்சம் மக்களுக்கு ஃபேவரைட் தொடராக இருக்கிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்த தொடர். மற்ற டிவிகளில் ஒளிபரப்பாகும் எந்த தொடரும் செய்யாத அளவிற்கு டி ஆர் பி யில் சாதனை படைத்து முதலிடத்தை பிடித்திருக்கிறது கயல். இந்த சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா என்கிற ஆவலில் பலரும் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக இயக்குனர் கதையை ஆமை வேகத்தில் நகர்த்தி வருகிறார். எழிலின் திருமண வரவேற்பே கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது எழிலின் திருமணம் இரண்டு வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. எழில் மற்றும் ஆர்த்தி இருவருக்கும் திருமணம் நடக்காது என்று பலரும் யூகித்து வந்தனர். இந்த நிலையில் இன்றைக்கு புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் வடிவும் எழிலின்ன் தந்தைக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது எழிலின் தந்தை அடிபட்டு கீழே விழுகிறார். மறுபுறம் மேடையில் எழில் மற்றும் ஆர்த்தி இருவரும் திருமண கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். எழில் எழுந்து வரவே எழிலுக்கு பதிலாக அவரது நண்பர் ஆனந்த் திருமண கோலத்தில் ஆர்த்தியின் அருகில் அமர்கிறார்.
பின்னர் ஐயர், “மாப்பிள்ளை அவரு தானே” என்று எழிலை கையை காட்டி கேட்கிறார். அதற்கு ஆனந்த், “ஆமாம் மாப்பிள்ளை மாறிப் போயிருச்சு, மந்திரத்தை சொல்லுங்க” என சொல்ல, ஆர்த்தியின் கழுத்தில் ஆனந்த் தாலி கட்டி விடுகிறார். இதை பார்த்த கயல், வடிவு உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV