தனது வீட்டில் முதல் முறையாக கிறிஸ்துமசை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி. அந்த வீடியோவை அவர் தனது Youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் கயல் சீரியல். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர்வை சேர்ந்தவர் சைத்ரா ரெட்டி. இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் சிறப்பான வில்லத்தனங்களை இவர் கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழில் இருந்து விலகி தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சைத்ரா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் சைத்ராவுக்கு ஜோடியாக ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவினாஷ் என்பவர் நடித்து வந்தார். அவினாஷ் கயலுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். சைத்ராவும் அவினாஷும் இருவரும் நல்ல நண்பர்கள். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர்கள், பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவினாஷுக்கு கால்களில் பிராக்சர் ஏற்பட்டு நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்து வருகிறார். அப்படி இருந்த போதும் அவர் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வீல் சேரில் இருந்தபடியே ஆடி டைட்டிலையும் வென்றிருந்தார்.
சைத்ரா அவருடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வீல் சேரில் இருக்கும் அவினாஷ் உடன் அவர் விளையாண்டு கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சைத்ரா முதல் முறையாக தனது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கிறார். அதில் அவினாஷ், அவரது மனைவி மற்றும் நண்பர்கள் பங்கேற்று உள்ளனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் Gift கொடுத்து கொள்கின்றனர். அந்த வீடியோவை அவர் தனது Youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Chaitra Reddy