கர்ப்பமாக இருக்கும் தனது தோழியின் வயிற்றில் முத்தமிட்டு தனது தோழிக்கு தாயாக மாறி அன்பைப் பொழிந்திருக்கிறார் கயல் சீரியல் நடிகை சைத்ரா. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானவர்கள் சைத்ரா ரெட்டி மற்றும் நட்சத்திரா. இதில் சித்ரா ரெட்டி பெங்களூருவை சேர்ந்தவர். நட்சத்திரா கேரளாவை சேர்ந்தவர். இருவரும் இந்த நாடகத்திற்கு பின்னர் நெருங்கிய தோழிகள் ஆயினர். இவர்களின் நட்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். நட்சத்திரா தமிழில் கிடா பூசாரி மகுடி என்கிற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. எனவே சின்னத்திரை பக்கம் திரும்பிய அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் நடித்தார். இதன் பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெருகியது.

இதே சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி. ஹீரோயினுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருந்ததோ, அதே அளவிற்கு வில்லிக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கும் என்பதை நிரூபித்தவர் சைத்ரா. நட்சத்திரா மற்றும் சைத்ரா இருவரும் எதிரிகள் போல் நாடகத்தில் நடித்திருந்தாலும், நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அதே போல செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானா, ரேஷ்மா போன்ற ஹீரோயின்களும் இவர்களுடன் நட்பில் இருக்கிறார்கள். இந்த 4 பேரும் அடுத்தவர்கள் பார்த்து பொறாமை கொள்ளும் அளவிற்கு நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, அவுட்டிங் செல்வது என்று அடிக்கடி தங்களது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவை தவிர திருமணமான அனைவரும் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது நட்சத்திரா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
நட்சத்திரா சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். கோவிலில் வைத்து எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது அவசரமாக திருமணம் நடைபெற்றதால் சைத்ரா உள்ளிட்ட யாரையுமே அவரால் அழைக்க முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் நட்சத்திராவை அவரது தோழி சைத்ரா ரெட்டி சந்தித்து தனது பாச மழையை பொழிந்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தனது தோழியின் வயிற்றில் முத்தமிட்டும் கொஞ்சும் பாச மழையை பொழிந்து இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சைத்ரா ரெட்டி ஏற்கனவே தன்னுடன் நடித்த அவினாஷ் என்பவருக்கு கால் உடைந்த போது அவரை தாய் போல இருந்து பார்த்துக் கொண்டார். அதேபோல் தற்போது தனது தோழி நட்சத்திராவையும் அவர் பார்த்துக் கொள்கிறார். இந்த புகைப்படங்களை பதிவிட்ட சைத்ரா உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவில் எங்கள் நண்பர்கள் 4 பேரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கும் என்று எங்களுக்கு ஆர்வமாக இருந்தது. இப்போது என் நட்சத்திரா கர்ப்பமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய தோழி வயிற்றில் குழந்தையை வைத்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மகிழ்ச்சி என்பது உங்கள் கர்ப்பிணி தோழியின் வயிற்றை தொட்டுப் பார்ப்பது தான். ஜூனியர் நட்சத்திரா வெளியே வந்து எங்களை சந்திப்பதற்காக நான் காத்திருக்கிறேன் என்று அழகான பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார் சைத்ரா.