எழில் அம்மா சிவசங்கரியின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட கயல்.! தெறி ப்ரோமோ.!

வெளியிட்டது

கயல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிவசங்கரி பற்றிய உண்மைகளை தற்போது கயல் முழுவதுமாக தெரிந்து கொள்கிறார். தெரிந்து கொண்ட கயல் சிவசங்கரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு செல்கிறார். இதனால் பரபரப்பு எழுந்து இருக்கிறது. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தற்போது சின்னத்திரை உலகில் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் கயலுக்கும் எழிலுக்கும் திருமணமும் நடைபெறுமா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கயலின் தம்பியை பணம் கொடுத்தவர்கள் வந்து திருப்பி கேட்டு திருமண மண்டபத்திலேயே வைத்து அடித்து துவைக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எழில் அம்மா சிவசங்கரியின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட கயல்.! தெறி ப்ரோமோ.! 1
இதனால் கடுப்பாகும் எழிலின் அம்மா சிவசங்கரி கயல் மற்றும் குடும்பத்தாரை மண்டபத்தை விட்டு உடனடியாக வெளியே செல்லும்படி கடுமையாக கூறுகிறார். ஆனால் எழிலோ கயல் குடும்பம் மண்டபத்திலிருந்து வெளியே சென்றால் நானும் அவர்களுடன் வெளியே சென்று விடுவேன் என்று சிவசங்கரியை மிரட்டுகிறார். பின்னர் சிவசங்கரி தான்தான் சூர்யாவை விட்டு கயலின் நற்பெயரை கெடுப்பதற்காக திட்டங்களை தீட்டினேன், இந்த விஷயம் மட்டும் எழிலுக்கு தெரிந்தால், என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதை ஒட்டு கேட்ட கயல் தற்போது நேராக வந்து சிவசங்கரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். நீ இதை செய்திருப்பாய் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி அவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

தன்னை மன்னித்து விடுமாறு சிவசங்கரி கயிலின் காலில் விழுந்து கதறுகிறார். ஆனால் கயல் கோபத்துடன் அங்கிருந்து செல்கிறார்.இதனால் ஆர்த்தி மற்றும் எழில் திருமணம் நின்று போய் எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்