சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் ப்ரோமோவை பார்த்த பலரும் தற்போது மிகுந்த கடுப்பாகி இருக்கின்றனர். குறைந்தபட்சம் உங்கள் உடைகளையாவது மாற்றி தொலையுங்கள் என்று ரசிகர்கள் தற்போது கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். டிஆர்பியில் முதலிடம் பெற்று விளங்கி வந்த சீரியல் தற்போது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் சீரியலாக மாறி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சன் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்ற வந்தது. ஒன்று கயல் மற்றொன்று எதிர்நீச்சல். எதிர்நீச்சல் சீரியல் வழக்கம் போல விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கயல் சீரியல் மிகுந்த சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்கள் பலரும் இயக்குனரை திட்டி தீர்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயலுக்கும் எழிலுக்கும் திருமண நடக்க வேண்டும் என்று சொல்லி பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவருக்கும் கயலின் பெரியம்மா மகள் ஆர்த்திக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எழிலுக்கும் ஆர்த்திக்கும் திருமண வரவேற்பது நடப்பது போன்ற காட்சிகள் கடந்த மூன்று வாரங்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் கயலுக்கு எழிலின் அம்மா செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் தெரிய வந்த போதிலும் அவர் அதை எழிலிடம் சொல்லாமல் திருமணம் முடிந்த பிறகு தான் சொல்லுவேன் என்று காத்துக் கொண்டிருக்கிறார். அந்த விஷயத்தை எழிலிடம் சொன்னால் எழில் உடனே திருமணத்தை நிறுத்தி விட்டு கயலை திருமணம் செய்து கொள்வார்.
ஆனால் அதை விட்டுவிட்டு தற்போது கதையை எங்கே எங்கேயோ நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பி கொண்டிருப்பது போல இயக்குனர் கதையை இழு இழுவென இழுத்து வருகிறார். இதனால் ப்ரோமோ வீடியோக்கள் கூட பார்வையாளர்களை பெறாமல் மிக குறைவான பார்வையாளர்களையே பெற்று வருகிறது. ரசிகர்களும் கமெண்ட்களில் இந்த சீரியலை கழுவி ஊற்றத் தொடங்கி இருக்கின்றனர். ஆரம்பத்தில் விரும்பி பார்த்த இந்த சீரியலை தற்போது ப்ரோமோ கூட பார்க்க பிடிக்கவில்லை என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV