நடிகர் விஜயின் ‘லியோ’ படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை பேசிய பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த ஷைன் டாம் சாக்கோ விஜய் பற்றி நெகட்டிவ்வாக தொடர்ந்து பேசி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தையும் ‘லியோ’ படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழகத்தை அடுத்து நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் என்று சொன்னால் அது கேரளா தான். ஆனால் கேரளாவில் இருக்கும் சில பிரபலங்கள் விஜய் படம் குறித்து தொடர்ந்து நெகடிவாக பேசி வருவது தமிழ் ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் வழக்கம் போல வசூலை வாரிக் கொடுத்திருந்தது லியோ திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து மலையாளத் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் சில தகவல்களை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது, ‘லியோ’ திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை. கிளைமேக்ஸில் ஒரு ஆள் எப்படி 200 பேரை அடிக்கிறார் என்பது தனக்கு தெரியவில்லை? இதெல்லாம் பார்த்தால் சூப்பர் ஹீரோ படங்கள் போல இருக்கிறது.
சாமானிய மக்களால் இந்த படங்களை கனெக்ட் செய்ய முடியவில்லை” என்று விமர்சித்து இருக்கிறார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் தந்தை மீது விமர்சனங்களை கூறி வருகின்றனர். மேலும் ‘சாணிக் காகிதம்’ படத்தில் உங்கள் பொண்ணு கீர்த்தி சுரேஷ் செய்த சண்டை எல்லாம் நீங்க பார்க்கலையா? என்று சொல்லி சுரேஷ் குமாரை விஜய் ரசிகர்கள் பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர். மேலும் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்த ‘பைரவா’ திரைப்படம் தோல்வியைத் தழுவிய போது எந்த கருத்தையும் சொல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷின் தந்தை இப்பொழுது எதற்கு கருத்து சொல்ல வருகிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.!