Categories: சினிமா

திடீரென வீடியோ வெளியிட்டு எமோஷனல் ஆன கீர்த்தி சுரேஷ்.! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

நடிகை கீர்த்தி சுரேஷ் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு எமோஷனல் ஆகியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தயாரிப்பாளராக இருந்த சுரேஷ் மேனனுக்கும் நடிகை மேனகாக்கும் பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் 2013ம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமனார். தமிழில் 2015ம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக அறிமுகமாகியிருந்தார்.முதல் படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென வீடியோ வெளியிட்டு எமோஷனல் ஆன கீர்த்தி சுரேஷ்.! என்ன காரணம் தெரியுமா? 1

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரெமோ’, விஜயுடன் இணைந்து ‘பைரவா’, சர்க்காரில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். பின்னர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக ‘போலோ சங்கர்’ என்கிற தெலுங்கு படத்திலும், ‘மாமன்னன்’ என்கிற படத்தில் நடித்த முடித்திருக்கிறார். தற்போது கைவசம் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்தது இருப்பதை முன்னிட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் தனது பெற்றோர் குரு இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோருக்கு நன்றி செலுத்திய பின்னர், தன்னை வெறுக்கும் ஹேட்டர்ஸிற்கும் நன்றி சொல்லியிருக்கிறார். தன்னை வெறுத்தவர்களாக தான் தன்னால் இந்த உயரத்திற்கு செல்ல முடிந்தது என்று அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்