Categories: சினிமா

தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.! புகைப்படங்கள் உள்ளே..!

வெளியிட்டது

தமிழின் முண்ணனி நடிகையான கீர்த்தி சுரேஷ் பொங்கல் திருநாளை தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.! புகைப்படங்கள் உள்ளே..! 1

ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘ரஜினி முருகன்’ தான். இந்த படத்தின் மூலமாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர். கடைசியாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் கடைசியாக இவர் நடித்திருந்த படம் ‘போலோ சங்கர்’. ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கைவசம் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘ரகுதாத்தா’ திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார் கீர்த்தி சுரேஷ்.


தொடர்ந்து ‘சைரன்’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் உலகமெங்கிலும் வாழும் இந்திய மக்கள் நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில் கீர்த்தி சுரேஷும் கொண்டாடி இருக்கிறார்.


தனது வீட்டில் பொங்கல் வைத்து, வண்ண கோலமிட்டு அவர் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்