Categories: சினிமா

திரையரங்கில் வியாபாரம் டல்..! OTT-க்கு வரும் Keerthy Suresh-ன் ரகு தாத்தா..! வெளியான தேதி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு சினிமாவில் கிடைத்தது. தொடர்ந்து ரெமோ , பைரவா என அடுத்தடுத்து படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்று இருக்கிறார்.

திரையரங்கில் வியாபாரம் டல்..! OTT-க்கு வரும் Keerthy Suresh-ன் ரகு தாத்தா..! வெளியான தேதி..! 1

அண்மையில் சில காலங்களாக கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவருக்கு வரவேற்புகளை கொடுக்கவில்லை. இதனால் தற்போது பாலிவுட்டில் களம் இறங்கி உள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்குவார் என கூறப்படுகிறது.

தற்போது இவர் நடித்த ரகு தாத்தா படம் கடந்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை ஆன நிலையில் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது திரையரங்கில் வெளியாகிய இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்