Categories: சினிமா

இரட்டை ஜடையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஸ்கூல் போட்டோவை பாத்து இருக்கீங்களா? இதோ போட்டோ

வெளியிட்டது

கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரட்டை ஜடையுடன் செம்ம cute ஆக இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் 2015ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

இரட்டை ஜடையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஸ்கூல் போட்டோவை பாத்து இருக்கீங்களா? இதோ போட்டோ 1

இதன் பின்னர் இவர் ரஜினி முருகன், தொடரி, பைரவா, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிகையாக அறிமுகமான குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான “மகாநடி” என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவரது புகழ் உச்சத்தை எட்டியது. தற்போது இவர் தெலுங்கில் இரண்டு படங்களும் தமிழில் இரண்டு படங்களும் நடித்து வருகிறார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் படத்திலும் மற்றும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட் நடத்தியும் வீடியோக்கள் எடுத்தும் அதை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரட்டை ஜடையுடன் செம்ம cute ஆக இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்