Categories: அரசியல்

கேஜரிவாலின் 10 அம்ச உத்திரவாதங்கள்!

டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அதன் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார்.

கேஜரிவாலின் 10 அம்ச உத்திரவாதங்கள்! 1
அரவிந்த் கேஜரிவால்

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கான உத்தரவாதங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று வெளியிட்டார்.

  • 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் மற்றும் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.
  • நிலத்தடியில் கேபிள்கள் அமைத்து மின்சாரம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு இல்லத்துக்கும் குழாய் மூலம் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் இலவசமாக 20,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் திட்டம் தொடரப்படும்.
  • டெல்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
  • அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  • டெல்லி போக்குவரத்து வசதியை விரிவுபடுத்துவது அதேசமயம் மலிவான விலையில் போக்குவரத்து சேவையை வழங்கப்படும்.
  • பெண்களுக்கான இலவச பேருந்து சேவையின் அடிப்படையில் மாணவர்களுக்கும் இது இலவசமாக்கப்படும்.
  • டெல்லியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். டெல்லியை பசுமை தில்லியாக மாற்ற 2 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் தில்லியை குப்பைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
  • பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக டெல்லி மாற்றப்படும்.
  • அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு சாலை, குடிநீர் விநியோகம், சிசிடிவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  • குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் அமைத்துத் தரப்படும்.

இவ்வாறான கொள்கைகளை உள்ளடக்கிய தேர்தல் உத்திரவாதங்களை அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்